Sunday, May 1, 2011

பஞ்ச் -5

பாபா மரணத்திற்கு காரணம் "வாஸ்து" சரியில்லையென வாதிட்டான் நண்பன். # புரிந்துகொண்டேன், எனக்கு "தோஸ்து" சரியில்ல..!


கனவு தேசம் !

ஐந்து நட்சத்திர ஆணவத்தில்
எட்டுமாடியோடு நிமிர்ந்துநிற்கும் கட்டிடத்தில்
பிறந்தநாள் விழாவை எளிமையாக
பத்துலட்ச செலவில் மட்டும் கொண்டாடியபின்
வந்திருந்த பிரபலங்களுடன்
வலிக்காமல்கை குலுக்கிவிட்டு திரும்புகையில்
ஆடையில் மட்டும் ஏழ்மைகாட்டி
நெருங்கிவரும் மேல்தட்டு
நங்கையர் சிலர்
இவனைப்பார்த்து உதட்டுச் சிவப்பை
இன்னும் விரிக்க
அலட்சிய புன்னகை உதிர்த்துவிட்டு
இறக்குமதி சிகெரெட்டை
வாயில் பொருத்தி லைட்டர் தேட
ஓடிவந்து பற்ற வைக்கும்
ஓட்டல் முதலாளி..
நெப்போலியனின் தலையை உடைத்து
கவிழ்த்துக்கொண்டு எச்சில் பண்ணி
அசிரத்தையாய் மீதம் வைத்து
தேர்ந்தெடுத்த தேவதைகள் நால்வரோடு
பின்னிக்கொண்டு வெளியில் வந்து
பின்னிருக்கை முழுதும் காலியாயிருக்க
முன்னிருக்கையில் நெருக்கியமரும் அந்த
சிற்றாடை சிற்றிடைகளுடன் சிரித்துக்கொண்டு
கதவு திறந்துவிட்ட காவலனுக்கு
ஆயிரம் மதிப்புள்ள காந்திநோட்டை
அலட்சிய டிப்சாக அளித்துவிட்டு
மேட் இன் ஜப்பானை ஸ்டார்ட் செய்ய
கிளம்பாமல் பல்லிளிக்குமதன் தயாரிப்பாளனை
ஆங்கிலக் கெட்ட வார்த்தையில்
அர்ச்சனை செய்து தரையிறங்கி
கோபத்தில் காரை ஓங்கி உதைக்க...
.... .... .... .... ....
.... .... .... .... ....
'அய்யோ' என்ற அலறல் கேட்டு
பிளாட்பார இடைஞ்சலிலிருந்து
பதறி விழித்துக்கொண்டான்
படுத்திருந்த பிச்சைக்காரன்.


~ 2008 ~

Saturday, March 19, 2011


பஞ்ச்-4


ஸ்ரீரங்கம், திருவாரூருனு அல்லாரும் அவுக சொந்த ஊர்ல நிக்கிறாங்கோ.. அதுனால நானும் சொந்த ஊருல நிக்கப்போறேன்
எலெக்சன் அன்னிக்கு.. ஓட்டு போட..!