வணக்கம். வரவேற்கிறேன் எனது வலை பதிவிற்கு.. இங்கு வரப்போகும் பதிவுகள்... "கற்பதற்கு நூலகத்தில் பெற்றதும்- கற்றதில் பெற்றதும்- கற்ற பின் நான் 'பெற்றதும்'!. படிப்பதற்கு சந்தையில் பிடித்ததும்- படித்ததில் பிடித்ததும்- படித்தபின் என் சிந்தையில் பிடித்ததும்..!!" ~மற்றும் நமது எண்ணங்களை பகிரவும்.
Monday, May 12, 2008
Saturday, May 3, 2008
தசாவதாரம் ஒலி நாடா வெளியீடு - ஒரு பார்வை.
ஏப்ரல் 25-ம் தேதி ஒரு வழியாக 'தசாவதார' பாடல்கள் முதல்வரால் வெளியிடப்பட்டு ஜாக்கி சானால் பெற்றுக்கொள்ளப்பட்டது. விழாவிற்கு அமிதாப், ஹேமமாலினி, ஜெயப்ரதா, மம்முட்டி, மல்லிகா, விஜய் ஆகியோர் வந்திருந்து படத்தைப பற்றி வியந்து பேசினர். விழா பன்மொழி கலைஞர்களால் நிரம்பியிருந்தாலும் பெரும்பாலும் தமிழில் தொகுக்கப்பட்டு பேசப்பட்டதை தமிழ் தெரியா விருந்தினர்கள் பொறுமை காத்து கேட்டுகொண்டிருந்தனர்.
கலைஞர், கமல் உரைகளின் சுவை புதியது இல்லை எனினும் வந்திருந்தவர் அனைவரும் ( விஜய் உட்பட) இனிமையாக பேசியது ஆச்சர்யம். அமிதாப் தனது சரியான சொற்றடர்களால் தனது வருகையை பதிவு செய்தார். ஹேமா, ஜெயப்ரதா, மம்முட்டியும் படத்தின் (உலக) நாயகனை பற்றி ஆச்சர்யப்பட்டு விட்டு அமர்ந்தனர்.
விழாவில் நகைச்சுவை காட்சி அரங்கேறியது போல் அனைவரும் கடைசி வரை சிரித்துக்கொண்டிருந்தது ஜாக்கி சான் பேசுகையில். அவரே சொன்னது போல் என்ன பேசுகிறார்கள் என்பது புரியாவிட்டாலும் தன் மேல் அன்பு காட்டியதாக சொன்னார். குழந்தை போல் கைகளை ஆட்டி அவர் பேசியது அவரது மனதை காட்டியது. அவருக்கு பிரபலங்களின் பெயர்களை உச்சரிக்க கற்றுத்தருகிறேன் என்று மல்லிகா அருகில் நின்று எடுத்துக் கொடுத்தது கூடுதல் நகைச்சுவை.
மேடையில் இத்தனை செலவு செய்த தயாரிப்பாளருக்கு நன்றி சொன்ன கமல், தனக்கு உறுதுணையாக இருந்த படத்தின் டைரக்டர் கே. எஸ். ரவிக்குமாரை (சற்று அதிகமாகவே) புகழ்ந்தார்.
பாடல்கள்..?
மொத்தம் 5 பாடல்கள். 2 லேட்டஸ்ட் இசையுடனும்,2 கிளாசிகல் இசையுடனும் உள்ளது. படத்தின் இசை அமைப்பாளர் இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை, அரங்கின் முதல் வரிசை முழுதும் அரசியல் தலைகள் ஆக்ரமித்திருந்தன.
கடைசியாக விழா பற்றி பரவி இருக்கும் ஒரு ஜோக்:
ஜாக்கி சானிடம் படத்தை பற்றி தயாரிப்பாளர் சொன்னபோது, ஒருவரே பத்து ரோல் செய்திருப்பதாக சொன்னதற்கு, ஜாக்கி சான் கூலாக கேட்ட கேள்வி "ஏன், உங்க ஊர்ல ஆர்டிஸ்ட் பஞ்சமா..?"

Subscribe to:
Comments (Atom)