Sunday, February 27, 2011

வேலையில்லா திண்டாட்டம் !


பத்து மணி அலாரத்தில் கண்விழி
சூரியன்மேல் கோபம் கொள்
பல் துலக்காமல் காபி குடி
காயத்துடன் ஷேவிங் முடி
துண்டெடுக்காமல் குளிக்க போ
இரண்டு குவளை நீரில்
இரண்டு மணிநேரம் குளி
தந்தையின் பார்வை படாமல்
உணவு கொள்
காசு கேட்டு தாயை
தொந்தரவு செய்
தண்டசோறு திட்டு பெறு
ரோஷம் வந்து வெளியேறு
நண்பர்களுடன் அரட்டை அடி
கோவில் சுவற்றில் கூட்டமாய் உட்கார்
தாவணிகள் விமர்சனம் செய்
செருப்பெடுத்தால் திரும்பிக் கொள்
மதியம் தூங்கு
நூலகம் தாண்டி தியேட்டர் செல்
மாலை நேர சினிமாவில்
மதி மயங்கு
களைத்துப் போய் வீடு திரும்பு
இரவு வரை டி.வி. பார்
நள்ளிரவில் உறங்கப் போ

அதிர்ஷ்டம் இல்லையென
அடித்துச் சொல்.

Friday, February 11, 2011

வெற்றி யாருக்கு?


மசூதிகள் இடிப்பர்
இராமருக்காக வென்பர்

கோயில்களில் குண்டு வைப்பர்
அல்லா வென்றா ரென்பர்

பாதிரியார்களை கொளுத்திடுவர்
பகவான்தான் சொன்ன ரென்பர்

யோசித்திருக்கிறீர்களா ..?!

இதில் லாபமும் வெற்றியும்
கடவுள்களுக்கோ மதங்களுக்கோ இல்லை..

திரியைக் கொளுத்திபோட்ட
திருடர்களுக்குத் தான் என்பதை ..!

Monday, February 7, 2011

பஞ்ச் - 1

ஸ்பெக்ட்ரம்
ஆரிய திராவிட சண்டை என்றார்..
ஆரும் தனியாக செய்யமுடியா தென்றார்..
கைதானாலும் கயவனல்ல என்கிறார்..

நல்லா சொல்றாருய்யா டீடெய்லு !!